மண்ணின் குரல்: ஜூலை 2016: தளவானூர் குடைவரைக்கோயில் (சிவன்)

0 மறுமொழிகள்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 




 
பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் கி.பி 6ஆம்  நூற்றாண்டில் ஆட்சி செய்தவன். 
மகேந்திரவர்மன் எழுப்பிய கோயில்கள் இன்றும் தமிழகத்தின் கோயில் கட்டுமானக் கலைக்குத் தனிச்சிறப்பை வழங்கி நிற்கின்றன.   
 
பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் முதலில் சமண மதத்தைச் சார்ந்திருந்தான்பி என்றும் பின்னர் சைவசம்யத்தின் பால் ஈர்க்கப்பட்டு சைவ சமயத்திற்கு மதம் மாறினால் அக்காலகட்டத்தில் அவன் கட்டிய கற்குகைக் கோயில்கள் மிகச் சிறப்பானவை. மண்டகப்பட்டில் உள்ள மும்மூர்த்தி கோயிலும், சித்தன்னவாசலில் உள்ள சமணர் கோயிலும் மகேந்திரவர்மன் காலத்தில் குடையப்பட்டவை ஆகும்.   அதோடு, பல்லாவரம், வல்லம், தளவானூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் மேலும் சில சிவன் கோயில்களையும்,  மாமண்டூர், மகேந்திரவாடி, சிங்கவரம், நாமக்கல் என்னும் இடங்களில்  பெருமாளுக்கு குடைவரைக் கோயில்களையும் கட்டினான்.

​இன்றைய விழியப் பதிவு தளவானூர்  குடைவரைக் கோயிலைப் பற்றிய தகவல்களை வழங்குகின்றது.


விழியப் பதிவைக் காண:   http://video-thf.blogspot.de/2016/07/blog-post_23.html
யூடியூபில் காண:  https://www.youtube.com/watch?v=im4edFGaM3w&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

இந்தப்  பதிவை செய்ய உதவிய நண்பர்கள் பேராசிரியர் ரமேஷ், திரு.கோ.செங்குட்டுவன் ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

மறுமொழிகள்

0 comments to "மண்ணின் குரல்: ஜூலை 2016: தளவானூர் குடைவரைக்கோயில் (சிவன்)"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES