த.ம.அ. செய்தி: 2016 செயல்பாடுகள் - மதுரை மணலூர் பள்ளி அருங்காட்சியகம் உருவாக்கம்

0 மறுமொழிகள்

வணக்கம்.

மதுரை  பகுதியில் இந்த ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு பணியாக மணலூர் அழகுமலர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சிறிய அளவிலான ஒரு பள்ளி அருங்காட்சியகத்தை அமைக்க உள்ளோம் என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தப் பணிக்கான ஆரம்ப கட்ட கலந்துரையாடல்கள் முடிந்து விட்டன. ஜூன் மாதம் தொடங்கி செயலாக்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

த.ம.அ வின் மதுரை பகுதி பொறுப்பாளர் இணைப்பேராசிரியர் டாக்டர்.மலர்விழியும்,  த.ம.அ செயற்குழு உறுப்பினர் பேராசிரியர். டாக்டர்.ரேணுகா தேவியும் இப்பணியை பொறுப்பெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

ஆண்டு இறுதி வாக்கில் இந்த த.ம.அ மாணவர் மரபு மைய அருங்காட்சியகம் முழுமை பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

அழகு மலர் பள்ளியின் தமிழ் மரபு அறக்கட்டளை மாணவர் மரபு மையத்தின் செயல்பாடாக இது அமையும்.

ஆரம்ப கட்ட அரும்பொருள் சேகரிப்பு என்பது மூன்று விதமான பொருட்கள் சேகரிப்பினை கொண்டதாக அமையும்.
1.பண்டைய வீட்டுப் பயண்பாட்டுப் பொருட்கள்
2.பண்டையவிவசாய, தொழில் கருவிகள்.
3.பண்டைய விளையாட்டுப் பொருட்கள்

நாம் இவ்வாண்டில் அமைக்க உள்ள பள்ளி அருங்காட்சிகத்திற்கான அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

சில புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.


மதுரை வட்டாரப் பொறுப்பாளர் ​டாக்டர்.மலர்விழி,  நம் செயற்குழு உறுப்பினர் பேராசிரியர். டாக்டர்.ரேணுகா தேவி,  ​​மணலூர் அழகு மலர் பள்ளித்தாளாளர் திருமதி .யோகலட்சுமி.



​த.ம.அ மாணவர் மரபு மையம் அமைக்க ஒதுக்கப்பட்டுள்ள அறை. 




இத்திட்டத்தின் வளர்ச்சி பற்றி தொடர்ந்து அவ்வப்போது உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அற்க்கட்டளை]

மறுமொழிகள்

0 comments to "த.ம.அ. செய்தி: 2016 செயல்பாடுகள் - மதுரை மணலூர் பள்ளி அருங்காட்சியகம் உருவாக்கம்"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES