THF Announcement: ebooks update: 02/11/2013 *Tanjavur Paintings in Koviloor*

2 மறுமொழிகள்

வணக்கம்.

தீபாவளி சிறப்பு வெளியீடாக தமிழகத்தின் கோவிலூர் ஆதீன வெளியீடாக வந்த கோவிலூர் தஞ்சாவூர் ஓவியங்கள் எனும் நூல் மின்னூலாக வெளிவருகின்றது.

கோவிலூர் ஆதீனகர்த்தரின் வழிபாட்டு மண்டபத்தை அலங்கரிங்கும் இந்த ஓவியங்களை இங்கு வரவழைத்து மடத்தை அழகு செய்தவர் அப்போதைய மடாதிபதியாக இருந்த ஸ்ரீலஸ்ரீ வீரசேகர ஞான தேசிக சுவாமிகள். அப்போது மடத்தில் இப்படங்களைப்  புகைப்படமாகப் பதிவு செய்தவர் பின்னர் இம்மடத்தின் 12 சன்னிதானமாகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்ரீலஸ்ரீ நாச்சியப்ப சுவாமிகள் ஆவார்.

உயரிய தரம் வாய்ந்த இந்தக் கலைப்படைப்புக்களைச் சாதாரணமாக யாவரும் பார்க்கக்கூடிய வாய்ப்பு இல்லை. இந்த ஓவியங்களைப் புகைப்படமாக்கி அதனை தொகுத்து நூலாக்கி வெளியிட்ட பெருமை கோவிலூர் மடத்திற்கே சேரும்.

நூலை வாசிக்க!

நூல் எண்: 356

மின்னாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி, உதவி: திரு.சொ.வினைதீர்த்தான்
மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி

இந்த நூலை தமிழ் மரபு அறகக்ட்டளை மின்னூலாக வெளியிட அனுமதி தந்த கோவிலூர் ஆதீனத்திற்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

சில படங்கள் நூலிலிருந்து..














அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]





மறுமொழிகள்

2 comments to "THF Announcement: ebooks update: 02/11/2013 *Tanjavur Paintings in Koviloor*"

K R A Narasiah said...
November 1, 2013 at 10:37 PM

படங்கள் மிக அழகாக உள்ளன. நூலைப் படிக்க வேண்டும். சமீபத்தில் நான் ஆய்வு செய்து கொண்டிருக்கும் அடையாறைப் பற்றிய செய்திகளில் ஸ்ரீ ல ஸ்ரீ நாச்சியப்ப சுவாமிகள் இடம் பெறுவதால் இந்த விஷயத்தில் என்க்குத் தனி அக்கறை!
இதுதான் சிறந்த தீபாவளிப் பரிசு!
நரசய்யா

Dr.K.Subashini said...
November 7, 2013 at 7:20 PM

இனிய சொற்களுக்கு மிக்க நன்றி திரு.நரசய்யா.

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES